
பீஸ்ட்டிற்கு கேஜிஎப் 2 போட்டியா - யஷ் பதில் வைரல்
கேஜிஎப் 2 திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாள் ஏப்ரல் 13 ஆம் தேதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் படமும் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. எனவே கேஜிஎப் 2 மற்றும் பீஸ்ட் படங்களுக்கும் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்று கருத்துக்கள் எழுந்தது .
இதுப்பற்றி கேஜிஎப் 2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் யஷ் "இது கேஜிஎப் படத்திற்கும் பீஸ்ட் படத்திற்கும் இடையே நடக்கும் போட்டியல்ல. இரு படங்களும் இணைந்தே வெளியாகின்றன. இது ஒன்றும் தேர்தல் அல்ல. இரண்டு படங்களையும் மக்கள் பார்க்க முடியும். விஜய் மிகப்பெரிய நடிகர். அவர் அடைந்த உயரத்தை குறைத்து மதிப்பிட முடியாது. அவரது கலை பணியும் மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் தன்மையையும் என்னோடு ஒப்பிட முடியாது. நான் கண்டிப்பாக பீஸ்ட் பார்ப்பேன். அதே போல விஜய் சாரின் ரசிகர்களுக்கும் கேஜிஎப் பிடிக்கும் என நம்புகிறேன். நாம் இணைந்து இந்த இரு படங்களையும் கொண்டாடுவோம்" எனக் கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!