
ஹிந்தி மார்க்கெட் - பாகுபலி 2வில் பாதி வசூலித்த ஆர்ஆர்ஆர்
"பாகுபலி 2" அளவிற்கு "ஆர்ஆர்ஆர்" இல்லை என்பது பரவலான கருத்தாக உள்ளது. ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் வட இந்தியாவில் பல ஊர்களுக்குச் சென்று படத்திற்கு புரமோஷன் செய்தார்கள். இருப்பினும் எதிர்பார்த்த அளவிற்கு படத்தின் வசூல் அமையவில்லை என்றுதான் தகவல் வெளிவருகிறது.
ஹிந்தி மார்க்கெட்டில் முதல் நாள் "ஆர்ஆர்ஆர்" படம் நிகர வசூலாக 20 கோடி வரையில்தான் வசூலித்துள்ளதாம். ஆனால், "பாகுபலி 2" படம் 40 கோடியை வசூலித்துள்ளது. "பாகுபலி 2" வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் பாதி அளவு வசூல் மட்டுமே கிடைத்திருப்பது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் வசூல் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். வட இந்தியாவில் படத்திற்கான உண்மையான வரவேற்பு திங்களன்றே தெரியும் என்கிறது பாலிவுட்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!