
தெலுங்கில் அதிகமாகும் பான்-இந்தியா ஹீரோக்கள்
தெலுங்கில் தயாராகி கடந்த வருடம் டிசம்பரில் வெளிவந்த "புஷ்பா" படமும் பான்--இந்தியா படமாக வெளியாகியது. எதிர்பார்ப்பையும் மீறி அப்படம் ஹிந்தியிலும் மற்ற மொழிகளிலும் நல்ல வசூலைப் பெற்றது. அப்படத்தின் மூலம் நாயகனாக நடித்த அல்லு அர்ஜுன் பான்--இந்தியா ஹீரோவானார்.
இப்போது அந்த வரிசையில் இன்னும் இரண்டு ஹீரோக்கள் சேர்ந்துள்ளனர். ராஜமௌலி இயக்கத்தில் நேற்று வெளிவந்த "ஆர்ஆர்ஆர்" படம் முதல் நாளிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றுவிட்டது. அப்படத்தில் நடித்த ராம்சரண், ஜுனியர் என்டிஆர் இருவருமே இப்போது பான்--ஹீரோக்கள் ஆகிவிட்டனர்.
பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராம்சரண், ஜுனியர் என்டிஆர் ஆகியோரைத் தொடர்ந்து அடுத்த பான்--இந்தியா ஹீரோ வரிசையில் காத்திருப்பவர் விஜய் தேவரகொன்டா. அவர் நடித்து வரும் "லிகர்" படம் பான்--இந்தியா படமாக வெளிவர உள்ளது. அதற்குள் தெலுங்கில் வேறு யாராவது பான்--இந்தியா ஹீரோவாக மாறுவார்களா என்பது தெரியவில்லை.
இருப்பினும் ஏப்ரல் 13 அன்று வெளியாக உள்ள "பீஸ்ட்" படம் பான்--இந்தியா படமாக வெளிவருவதால் விஜய், பான்--இந்தியா ஹீரேவாக உயர்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏப்ரல் 14ல் வெளியாக உள்ள கன்னடப் படமான "கேஜிஎப் 2" மூலம் தன்னுடைய பான்--இந்தியா அந்தஸ்தை யாஷ் இன்னும் உயர்த்திக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!