
ஆர்ஆர்ஆர் - முதல் நாள் வசூல் எவ்வளவு?
நேற்றைய முதல் நாள் வசூலாக சுமார் 150 கோடியை எளிதில் கடந்திருக்கும் என முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திரா, தெலுங்கு மாநிலங்களில் ஷேர் தொகையாக மட்டும் 74 கோடி கிடைத்துள்ளதாம். கர்நாடகாவில் 16 கோடி, தமிழகத்தில் 10 கோடி, கேரளாவில் 3 கோடி, அமெரிக்காவில் "பெய்டு பிரிவியூ" காட்சிகளில் மட்டும் 26 கோடியும், இங்கிலாந்தில் 2 கோடியும், ஹிந்தியில் 20 கோடி வரையிலும் வந்திருக்கலாம் என்கிறார்கள். இந்தத் தொகையே 148 கோடி வரை வருகிறது. இன்னும் விடுபட்ட வெளிநாடுகளின் விவரங்களையும் கணக்கிட்டால் 150 கோடிக்கும் மேல் வசூலாகியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் இரண்டு நாளுக்கும் சேர்த்து கூட 150 கோடி வரலாம். முதல் வார முடிவில் 500 கோடியைத் தொடவும் வாய்ப்புள்ளது என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் வருகின்றன. "பாகுபலி 2" வசூலை "ஆர்ஆர்ஆர்" கடக்குமா, கடக்காதா என்பதுதான் ஒரு கேள்வியாக உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!