
சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகர்
மார் 23, 2022
Advertisement
தெலுங்கில் ஜதிரத்னலு படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் 20வது படத்தை இயக்குகிறார் இயக்குனர் அனுதீப். எஸ்.தமன் இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கிறது. தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபதி இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது . மேலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் 20 வது படத்திலும் வெங்கடேஷ் இணைந்து நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது . இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!