
25 நாட்களைக் கடந்து ஓடி முடிவுக்கு வரும் வலிமை
படத்தின் வசூல் பற்றி கூட பலரும் பல வித தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், படம் நஷ்டத்தைக் கொடுக்கவில்லை என்றுதான் திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள். அப்படி ஏதும் நஷ்டம் ஏற்பட்டிருந்தால் இந்நேரம் வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளரை அணுகி பிரச்சினை செய்திருக்க மாட்டார்களா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். இருப்பினும் ஒரு சில ஏரியாக்களில் படத்திற்கான லாபம் குறைவாக இருந்ததாகவும் தெரிவிக்கிறார்கள்.
இந்த வாரம் "ஆர்ஆர்ஆர்" படம் வெளியாக இருப்பதாலும், "வலிமை" படம் மார்ச் 25ல் ஓடிடியில் வெளியாக இருப்பதாலும் இன்று முதல் தியேட்டர்களில் கூட்டம் வராமல் போக வாய்ப்புகள் அதிகம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!