மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிய விஜயகாந்த்
மார் 19, 2022
Advertisement
சினிமாவில் அயராது நடித்து வந்த விஜயகாந்த் ஒரு கட்டத்திற்கு மேல் அரசியலில் நுழைந்தார். எதிர்கட்சி தலைவராக உயர்ந்த அவருக்கு பின்னர் உடல்நிலை சரியில்லாமல் போக சிகிச்சை, வீட்டிலேயே ஒய்வு என உள்ளார் விஜயகாந்த். சமீபத்தில் அவரது உடல் மெலிந்த போட்டோக்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. சினிமாவில் கம்பீரமாக பார்த்த விஜயகாந்தா இது என பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தனது மனைவி பிரேமலதாவின் பிறந்தநாளை மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் உடன் விஜயகாந்த் கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!