
விஜய், மகேஷ்பாபு மீண்டும் போட்டி
விஜய் நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் "பீஸ்ட்". மகேஷ்பாபு நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் "சர்க்காரு வாரி பாட்டா". இப்படத்தின் முதல் சிங்கிளான "கலாவதி" பாடலை கடந்த மாதம் பிப்ரவரி 13ம் தேதி யு டியுபில் வெளியிட்டனர். வெளியிட்ட 24 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்தது. ஆனால், மறுநாள் "பீஸ்ட்" பாடலின் முதல் சிங்கிளான "அரபிக்குத்து" வெளியாக அந்த சாதனையை உடனடியாக முறியடித்தது. "அரபிக்குத்து" பாடல் 24 மணி நேரத்தில் 17 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. அப்போதைய போட்டியில் மகேஷ் பாபுவை முந்தி விஜய் சாதனை படைத்தார்.
இப்போது மீண்டும் அப்படி ஒரு போட்டி ஏற்பட உள்ளது. "பீஸ்ட்" படத்தின் இரண்டாவது சிங்கிளான "ஜாலிலோ ஜிம்கானா" இன்று வெளியாகிறது. "சர்க்காரு வாரி பாட்டா"வின் இரண்டாவது சிங்கிளான "பென்னி" பாடல் நாளை யு டியூபில் வெளியாகிறது. இப்பாடலில் மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா நடித்துள்ளார். இரண்டாவது சிங்கிள் போட்டியில் விஜய், மகேஷ்பாபு இருவரில் யாருடைய படம் சாதனை படைக்கப் போகிறது என்ற போட்டி மீண்டும் ஏற்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!