
பாலா - சூர்யா படத்தில் இணைந்த சுதா
மார் 19, 2022
Advertisement
நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்த படம் மீனவர்கள் பிரச்சினை சம்பந்தப்பட்ட கதையில் உருவாகிறது. அதனால் தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி போன்ற கடலோர பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. மேலும் இந்த படத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் பட வேலைகளில் அவர் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!