
கேஜிஎப் 2 படத்திலிருந்து வெளியாகும் புதிய பாடல்
மார் 18, 2022
Advertisement
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூலம் யாஷ் இந்திய அளவில் பிரபல நடிகராக மாறினார். தற்போது கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது . தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாக இருக்கும் கேஜிஎப் 2 இரண்டாம் பாகத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடத்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகை ரவீனா டண்டனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தில் இருந்து தற்போது டூபான் என்ற பாடல் மார்ச் 21-ம் தேதி வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது .
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!