
5 வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் மீண்டும் பாவனா
அந்த சமயத்தில் அவரது வாழ்க்கையில் எதிர்பாராத விரும்பத்தகாத ஒரு நிகழ்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கிய அவர் அதன்பிறகு பிரபல கன்னட தயாரிப்பாளர் நவீனை திருமணம் செய்துகொண்டு பெங்களூரில் செட்டில் ஆனதுடன் கன்னட படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
இந்த நிலையில் 5 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார் பாவனா. படத்திற்கு "என்திக்காக்காகொரு பிரேமந்தார்னு" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டரை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள மம்முட்டி, பாவனா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தப்படத்தை அடில் மைமூநாத் அஷ்ரப் என்பவர் இயக்குகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!