
மாநாடு பாணியை விக்ரம் படத்தில் பின்பற்றும் அனிருத்
இந்தப்படத்தில் பாடல்களின் எண்ணிக்கை குறைவுதான் என்றும் அதற்கு பதிலாக பின்னணி இசையின் ஆதிக்கம்தான் மேலோங்கி இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான மாநாடு படத்தில் சிம்புவுக்கும் எஸ்ஜே சூர்யாவுக்கும் என தனித்தனியாக தீம் மியூசிக் உருவாக்கப்பட்டு ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. அந்தவகையில் இந்த படத்தில் கமல், விஜய்சேதுபதி, பஹத் பாசில் மூவருக்குமே தனித்தனி தீம் மியூசிக்குகளை அனிருத் உருவாக்கி வருகிறாராம். மாநாடு படம் போல இந்தப்படத்திலும் தீம் மியூசிக் பேசப்படும் என்கிறார்கள் அனிருத் வட்டாரத்தில்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!