
உதைப்பதில் வல்லவர்கள் பெண்கள் தான் ; ஸ்ருதிஹாசன்
தற்போது கேஜிஎப் புகழ் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் பிரபாஸுடன் சலார் படத்தில் இணைந்து நடித்து வரும் ஸ்ருதிஹாசனுக்கு இந்தப் படத்திலும் ஆக்சன் காட்சிகள் இருக்கின்றனவாம். இதற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை கற்றுள்ள ஸ்ருதிகாசன் இதுகுறித்து கூறும்போது, "பெண்களுக்கு சினிமாவில் ஆக்ஷன் காட்சிகள் ரொம்பவே குறைவு தான்.. இதற்காக இயக்குனர்களை நான் குறை சொல்ல மாட்டேன். நிஜ நிலவரம் அப்படி இருக்கிறது. அதேசமயம் மற்ற யாரையும் விட உதைப்பதில் வல்லவர்கள் பெண்கள் தான். பெண் உதைப்பதை பார்க்கவே அழகாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!