
ராஜூ முருகன் - கார்த்தி படம் மே மாதம் துவக்கம்
இந்த படத்தின் கதை உருவாக்கத்திற்காக தென்காசியில் முகாமிட்டு தற்போது படத்தின் ஸ்கிரிப்ட் முழுவதையும் தயார் செய்து விட்டாராம் ராஜு முருகன். விருமன் படத்தை முடித்துவிட்ட கார்த்தி, தற்போது பிஎஸ் மித்ரன் டைரக்ஷனில் சர்தார் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் வரும் மே மாதம் ராஜூ முருகன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!