
வலிமை படத்திற்கு எதிராக மெட்ரோ தயாரிப்பாளர் வழக்கு
படம் வெளியாகி விட்ட நிலையில் வலிமை திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள், தங்களின் மெட்ரோ படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த படத்தை தயாரித்த ஜே.கே.கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மெட்ரோ படத்தை இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் தயாரிக்க உள்ள நிலையில், அதே கதை, கதாபாத்திரங்களுடன் படமாக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. இது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது என்பதால், வலிமை படத்தை சாட்டிலைட் சேனல், ஓடிடி தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று ஜெயகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மார்ச் 17ம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கும்படி, வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர், இயக்குனர் வினோத் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!