
7 மொழியில் உருவாகும் ஸ்ரேயா படம்
அவ்வப்போது வந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு போகிறார். நரகாசுரன், சண்டக்காரி படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் அவர் கப்ஜா என்ற பான் இண்டியா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, மராத்தி, ஹிந்தி என 7 மொழிகளில் உருவாகிறது.
கன்னட நடிகர்கள் உபேந்திரா, கிச்சா சுதீப் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ஆர். சந்துரு இயக்குகிறார். கேஜிஎப் படத்திற்கு இசை அமைத்த ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். ஏ.ஜே.ஷெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். இது ஒரு பேண்டசி படமாகும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!