பாலா - சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்தில் இணையும் நடிகர்கள்
Advertisement
Advertisement
பாலா - சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்தில் இணையும் நடிகர்கள்
மார் 10, 2022
அ நிறம் | அளவு
Advertisement
நந்தா, பிதாமகன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிறகு பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் புதியப் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வருகிற மார்ச் 20 முதல் மதுரையில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது . இந்த படத்தில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . மேலும் முன்னணி நடிகைகளான கீர்த்தி சுரேஷ், அதர்வா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இந்த படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!