4000 திரைகளுக்கு மேல் வெளியாகும் புனித் ராஜ்குமாரின் ஜேம்ஸ்
Advertisement
Advertisement
4000 திரைகளுக்கு மேல் வெளியாகும் புனித் ராஜ்குமாரின் ஜேம்ஸ்
மார் 09, 2022
அ நிறம் | அளவு
Advertisement
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சில மாதங்களுக்கு முன்பு திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். புனித் ராஜ்குமார் நடிப்பில் கடைசியாக சில படங்களில் நடித்து வந்தார் . அப்படங்களில் ஒன்றான "ஜேம்ஸ்" படத்தை சேத்தன்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரியா ஆனந்த், சரத்குமார், ஆதித்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜேம்ஸ் படத்தில் புஜித் ராஜ்குமாருக்கு அவரது அண்ணன் சிவராஜ்குமார் டப்பிங் பேசியுள்ளார். வரும் மார்ச் 17-ம் தேதி புனித் பிறந்தநாளில் ஜேம்ஸ் திரைப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 4000 திரைகளுக்கு மேல் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது .
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!