
சிரஞ்சிவி ஜோடியாக ஸ்ருதிஹாசன் : ரசிகர்கள் ஆச்சரியம்
இருந்தாலும் தற்போது பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் பான்--இந்தியா படமான "சலார்" படத்தில் அவரது ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முன்னணி இயக்குனரான கோபிசந்த் மலினேனி இப்படத்தை இயக்குகிறார்.
இதற்கடுத்து சிரஞ்சீவி ஜோடியாக மற்றுமொரு தெலுங்குப் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். பாபி இயக்கத்தில் சிரஞ்சீவியின் 154வது படமாக இந்தப் படம் உருவாக உள்ளது. நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு இது பற்றி தகவலை சிரஞ்சீவியும் வெளியிட்டிருந்தார்.
அடுத்தடுத்து மூன்று பெரிய தெலுங்குப் படங்களில் நடிக்க ஸ்ருதி ஒப்பந்தமாகி இருந்தாலும் "சலார்" படம் தவிர மற்ற இரண்டு படங்களிலும் 60 வயதிற்கு அதிகமான நடிகர்களான பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி ஆகியோருடன் நடிக்க சம்மதித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!