
கடல போட ஒரு பொண்ணு வேணும்: செல்போன் சிக்கல்களை சொல்லும் படம்
ஆனந்தராஜன் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: ஒரு இளைஞனின் காதல் தேடலாக இன்றைய இளைய தலைமுறையை கவரும் அழகான காதல் கதையாக, ஒரு இரவில் நடக்கும் கதையில், காமெடி நிறைந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது. வளர்ந்து வரும் இன்றைய சூழலில் எல்லோரிடமும் செல்போன் உள்ளது. இது சில நேரங்களில் சிலருடைய வாழ்க்கைக்கு உந்துதலாக அமைகிறது. சிலருடைய வாழ்க்கைக்கு சிக்கலாகவும் அமைகிறது.
தன்னுடைய பரம்பரை சாபத்தை நீக்க போராடும் ஹீரோ அசார். தான் காதலிச்சிதான் கல்யாணம் பண்ணனும் என்கிற எண்ணத்தோடு பல பெண்களிடம் காதலை சொல்லியும் தோல்வியே அடைகிறார். இவர் கடைசியாக ஒரு பெண்ணை பாலோ செய்து தன்னுடைய காதலை தெரிவிக்கின்றார். அவர் பதிலை செல்போனில் தெரிவிப்பதாக கூற சில மணி நேரத்திற்கு பின் தன் வாழ்நாளில் மறக்க முடியாத சிக்கல்களை அந்த செல்போன் மூலம் சந்திக்கிறார்.
இதிலிருந்து அவர் எப்படி மீண்டார், காதலி பதில் என்ன ஆனது, இறுதியில் தனது குடும்பத்தின் சாபத்தை நீக்கினாரா? என்பதை டைம் லூப்ஸ் முறையில் காதல், காமெடி, சுவாரஸ்யம் என வித்தியாசமான கோணங்களில் சொல்கிறோம் என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!