
வலிமை - 3வது வாரத்திலும் தொடர முடிவு
ஆனால், "ஜெய் பீம்" பட சர்ச்சை காரணமாக, சில மாவட்டங்களில் சூர்யா நடித்துள்ள "எதற்கும் துணிந்தவன்" படத்தை வெளியிட வேண்டாம் என பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் பிரமுகர்கள் சிலர் கேட்டுக் கொண்டுள்ளனர். எங்கே தங்களது தியேட்டர்களுக்கு பாதிப்பு வருமோ என்று பயந்துள்ள அந்த மாவட்டங்களில் உள்ள பல தியேட்டர்காரர்கள் பிரச்சினையை சமாளிக்க "வலிமை" படத்தை 3வது வாரத்திலும் தொடர முடிவு செய்துள்ளார்களாம்.
"வலிமை" படம் நன்றாக ஓடுகிறது, அதனால் தூக்க முடியவில்லை. சூர்யாவுக்கும், "எதற்கும் துணிந்தவன்" படத்திற்கும் எங்களது வாழ்த்துகள் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சமாளிக்கப் பார்க்கிறார்கள். ஆனால், "வலிமை" படத்திற்கு ஒரு காட்சிக்கு பத்துப் பதினைந்து பேர்தான் வருகிறார்களாம். "எதற்கும் துணிந்தவன்" படத்தை வேண்டாம் என்று சொன்னால் அதன்பின் அவர்களால் "பீஸ்ட்" படத்தை வாங்கி திரையிட முடியாது. எனவே தான் இப்படி சமாளிக்கிறார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
"எதற்கும் துணிந்தவன்" படத்தைத் தைரியமாக வெளியிடும் சில தியேட்டர்களில் பிரச்சினை எதுவும் எழவில்லை என்றால் உடனடியாக அவர்கள் "வலிமை" படத்தைத் தூக்கிவிட்டு, "எதற்கும் துணிந்தவன்" படத்தை வெளியிடவும் தயாராக இருக்கிறார்களாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!