
மனைவியை விவாகரத்து செய்தார் இயக்குனர் பாலா
கடந்த 2004ம் ஆண்டு தேனியை சேர்ந்த முத்துமலர் என்பவரை பாலா திருமணம் செய்தார். மதுரையில் இவர்களது திருமணம் விமரிசையாக நடைபெற்றது. இவர்களுக்குப் பிரார்த்தனா என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் பாலாவின் திருமண வாழ்வில் விரிசல் ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக கணவன் - மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் முறையிட்டு இருந்த நிலையில் தற்போது குடும்பநல நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!