ஆர்ஆர்ஆர் - அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் சாதனை
மார் 08, 2022
Advertisement
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவகன், ஸ்ரேயா, ஒலிவியா மோரிஸ் மற்றும் பலர் நடித்துள்ள "ஆர்ஆர்ஆர்" படம் மார்ச் 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இப்படத்தின் பிரிமீயர் காட்சிகள் அமெரிக்காவில் 24ம் தேதியே நடைபெற உள்ளது. அதற்கான முன்பதிவு ஏற்கெனவே ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஒரு புதிய சாதனையையும் படைத்துள்ளது.
பிரிமீயர் காட்சிகளின் வசூலாக முதல் முறையாக ஒரு இந்தியத் திரைப்படம் 8 லட்சம் யுஎஸ் டாலர் தொகை வசூலித்துள்ளது தான் அந்த புதிய சாதனை. அதில் 5 லட்சம் தொகை சினிமார்க் தியேட்டர்கள் மூலம் கிடைத்துள்ளதாம். இதை படத்தை அமெரிக்காவில் வெளியிடும் வினியோக நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரிமீயர் காட்சிகளுக்கான முன்பதிவு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. அதனால், வசூல் தொகை இன்னும் அதிகமாகலாம்.
"ஆர்ஆர்ஆர்" படத்தின் வசூல் "பாகுபலி 2" வசூலை மிஞ்சும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் இருக்கிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!