
காதலிக்க நேரமில்லை -- பீஸ்ட் கதாநாயகி பூஜா ஹெக்டே
பிரபாஸ் உடன் பூஜா கதாநாயகியாக நடித்துள்ள பான்--இந்தியா படமான "ராதேஷ்யாம்" இந்த வாரம் மார்ச் 11ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காக பிஸியாக பிரமோஷன் செய்து கொண்டிருக்கிறார் பூஜா.
அப்படத்திற்கான பேட்டி ஒன்றில் யாரைக் காதலிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “காதலிக்க நேரமில்லை. ஒரு வருடத்திற்கு நான்கைந்து படங்களில் நடித்து வருகிறேன். காதலிக்க நிறைய நேரம் தேவைப்படும், அப்போதுதான் காதல் வளரும். ஆனால், இப்போது எனக்கு அதற்கான நேரமில்லை,” என்று பதிலளித்துள்ளார்.
ஒருவேளை நேரம் கிடைத்தால் காதலிப்பார் போலிருக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!