
சிரஞ்சீவி முன்னுதாரணம் : ஐதராபாத்தில் சூர்யா பேச்சு
நிகழ்ச்சியில் சூர்யா பேசுகையில், “தெலுங்கு ரசிகர்களுக்கு எனது வாழ்த்துகள். இந்த கொரோனா சமயத்தை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை அகான்டா முதல் புஷ்பா வரை, பங்கார்ராஜு முதல் பீம்லாநாயக் வரைக் காட்டிவிட்டீர்கள். உங்களால்தான் எங்களுக்கும் நம்பிக்கை வந்தது, அதனால்தான் படத்தை நம்பிக்கையுடன் வெளியிடுகிறோம்.
என்ஜிஓ ஆரம்பிப்பதற்கு சிரஞ்சீவிதான் எனக்கு முன்னுதாரணமாக இருந்தார். நீங்கள் வலிமையும், சக்தியையும் கொடுப்பதால்தான் இப்படியெல்லாம் செய்ய முடிகிறது. இதற்கு முன்பு நான் நடித்த படங்கள் எல்லாம் சிறப்பானவை. இப்படத்தில் பிரியங்காவின் உழைப்பு மிகவும் அற்புதமானது. பல வருடங்களுக்கு முன்பு எனது கம்பெனியில்தான் பாண்டிராஜ் அவருடைய பயணத்தை ஆரம்பித்தார். நீண்ட நாட்களாக நல்லுறவுடன் இருக்கிறோம். எதற்கும் துணிந்தவன் படத்தை தியேட்டர்களில் பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும்,” என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!