
விஜய்சேதுபதிக்கு கோல்டன் விசா
இந்த விசா பெறுவதன் மூலம் ஐக்கிய அமீரகத்தின் கவுரவ குடிமக்களாக வாழலாம். பாலிவுட்டில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான் உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர். கேரளாவில் மம்முட்டி, மோகன்லால், பிருத்விராஜ் பெற்றுள்ளனர். தமிழில் பார்த்திபன் பெற்றுள்ளார்.
இந்நிலையில் விஜய் சேதுபதிக்கும் அமீரக அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக விஜய் சேதுபதி 2 வருடங்கள் துபாயில் வேலை பார்த்தார். வேலை பார்த்த நாட்டின் கோல்டன் விசா விருது பெற்ற விஜய் சேதுபதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!