மாரி செல்வராஜ் இயக்கத்தில் "பரியேறும் பெருமாள்" படத்தில் நடித்த கதிர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் எஸ். எல். எஸ் ஹென்றி இயக்கத்தில் "இயல்வது கரவேல்" படத்தில் கதிர் கதாநாயகனாகன் நடிக்கிறார். குழந்தை நட்சத்திரமாக அப்பா, அம்மா கணக்கு , காஞ்சனா-3 போன்ற படங்களில் நடித்த யுவலட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கமாஸ்டர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எமிநெட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இன்று இப்படத்தின் பூஜை சென்னையில் ஒரு ஸ்டுடியோவில் நடைபெற்றது. புதுச்சேரி , வடசென்னை ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது .
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!