
சினிமாவில் 12 ஆண்டுகள் : சமந்தா நன்றி
ஆனால், சமந்தா முதன் முதலில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமான படம் "மாஸ்கோவின் காவிரி". சில பல காரணங்களால் அந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போனதால் "ஏ மாயா சேசவே" அவருடைய முதல் கதாநாயகிப் படமாக அமைந்தது. அதன்பின் தமிழ், தெலுங்கில் பல வெற்றிகளைப் பெற்றார். தனது முதல் பட கதாநாயகனாக நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு கடந்த வருடம் அவரை விட்டுப் பிரிந்தார்.
திரையுலகில் 12 வருடங்களை நிறைவு செய்துள்ள குறித்து சமந்தா, “திரையுலகிற்குள் வந்து இன்றுடன் 12 வருடங்கள் ஆகிறது. லைட்ஸ், கேமரா, ஆக்ஷன் என 12 வருட காலமாக இருக்கும் ஈடு இணையில்லா தருணம் இது. உலகின் சிறப்பான, விசுவாசமான ரசிகர்களைப் பெற்றதற்காக மிகவும் நன்றியுடன் இருக்கிறேன்,” என சமூக வலைத்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!