
சீனாவில் வெளியாகும் கனா திரைப்படம்
பிப் 25, 2022
Advertisement
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்டு 2018-ம் ஆண்டு வெளியான கனா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்ததோடு மட்டுமல்லாமல் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார். தற்போது கனா திரைப்படம் வரும் மார்ச் 18-ம் தேதி முதல் சீனாவில் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என அருண்ராஜா காமராஜ் மற்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளனர். ‛‛மகிழ்ச்சியாக உள்ளது. கனா படத்தின் மொத்த படக்குழுவுக்கும் பெருமையான தருணம்"" என்கிறார் சிவகார்த்திகேயன்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!