
விரைவில் அம்மாவாகும் காஜல் : மகிழ்ச்சியை பகிர்ந்த தங்கை நிஷா
இந்த நிலையில் தற்போது காஜல் அகர்வாலின் தங்கையும் இஷ்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவருமான நிஷா அகர்வால், காஜலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் ஒரு தகவல் பதிவிட்டுள்ளார். அதில், ஆம், இது அதிகாரப்பூர்வமானது. நான் இன்னொரு குழந்தைக்கு தாயாக போகிறேன்(காஜலின் வயிற்றில் கையை வைத்து போட்டோ பதிவிட்டுள்ளார் நிஷா). அந்த அன்பான குழந்தையை சந்திக்க என்னால் காத்திருக்க முடியாது. காஜல் அகர்வால் மற்றும் கவுதம் கிச்சுலு நீங்கள் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும் நல்ல பலத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன். நீங்கள் இருவரும் புதிய பாத்திரங்களை ஏற்று இந்த அழகான பெற்றோருக்கான பயணத்தை தொடங்குங்கள் என வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ள நிஷா அகவர்வால் .


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!