
பிற மொழிகளில் கடும் போட்டியில் வலிமை
பொதுவாக அஜித் படங்களுக்கு மற்ற மாநிலங்களில் பெரிய அளவில் வரவேற்பு இருந்ததில்லை. இந்தப் படத்தில் தெலுங்கு நடிகரான கார்த்திகேயா வில்லனாக நடிப்பதாலும், ஹிந்தி நடிகை ஹுமா குரேஷி கதாநாயகியாக நடித்திருப்பதாலும் தெலுங்கு, ஹிந்தி மார்க்கெட்டில் படத்திற்கு வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது. கர்நாடகா, கேரளாவில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பெரிய அளவில் எந்த போட்டியும் இல்லாமல் படம் வெளியாகிறது.
ஆனால், தெலுங்கு, ஹிந்தியில் "வலிமை" படத்திற்குப் போட்டியாக இரு படங்கள் உள்ளன. தெலுங்கில் பவன் கல்யாண் நடித்துள்ள "பீம்லா நாயக்", ஹிந்தியில் ஆலியா பட் நடித்துள்ள "கங்குபாய் கத்தியவாடி" ஆகிய படங்கள் வெளியாகின்றன. இந்தப் படங்களுக்குத்தான் அவர்கள் முன்னிலை கொடுத்து அதிக தியேட்டர்களைக் கொடுத்துள்ளார்களாம். அதனால், ஆந்திரா, தெலங்கானா, வட இந்தியாவில் "வலிமை" படம் குறைவான தியேட்டர்களில்தான் வெளியாகிறதாம். படம் நன்றாக இருந்தால் அப்படங்களை மீறி "வலிமை" வசூல் சாதனை புரிய வாய்ப்புள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!