
இயக்குனர் மணிகண்டனை கட்டித்தழுவி முத்தமிட்டு வாழ்த்திய மிஷ்கின்
இது குறித்த புகைப்படம், வீடியோக்களை வெளியிட்டு மிஷ்கின் கூறுகையில், ‛‛கடைசி விவசாயி தந்த மகா கலைஞனாக மணிகண்டனை அவன் ஊரான உசிலம்பட்டிக்கு சென்று சந்தித்தேன். ஆரத் தழுவினேன். மிகச் சிறந்த படைப்பை தமிழுக்கு தந்த அவனுக்கு நன்றி கூறி அவன் கரங்களை முத்தமிட்டேன். அப்படத்தின் கதையின் நாயகனான ஒட்டுமொத்த இந்தியாவின் எல்லா விவசாயிகளின் அடையாளமாக வாழ்ந்த பெரியவரின் வீட்டுக்கு சென்று அவரது படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினேன். மணிகண்டன் படப்பிடிப்பு செய்த இடத்திற்கு சென்று மதிய உணவு உண்டோம். இந்த ஒரு நாள் ஒரு அற்புத நாளாக மாறியது. மணிகண்டா, உன் பயணம் தொடரட்டும். உன்னை இயற்கை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்"" என தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!