
தோழியுடன் மீண்டும் சமந்தாவின் கேரளா டூர்
கடந்த டிசம்பர் மாதம் கேரளா, கோவா ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வந்த சமந்தா, கடந்த ஜனவரியில் சுவிட்சர்லாந்து ட்ரிப் சென்றுவந்தார். அதன்பிறகு சாகுந்தலம், யசோதா, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் மீதமிருந்த தனது பணிகளை முடித்து கொடுக்க ஆரம்பித்தார். இப்போது மீண்டும் அவர் தனது தோழி மேக்னா வினோத்துடன் மீண்டும் கேரளாவுக்கு சுற்றுலா கிளம்பிவிட்டார்.
இரண்டு தினங்களுக்கு முன் சாலக்குடியில் உள்ள அதிரம்பள்ளி அருவியின் அருகே ஒரு பாறையின் மீது நின்றுகொண்டே யோகா செய்வது போன்று எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் சமந்தா. இப்போது ஆழப்புழா அருகில் உள்ள மராரிகுளம் கடற்கரையில் தனது தோழியுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா, எல்லாமே மில்லியனில் லைக்ஸ அள்ளி வருகின்றன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!