
தமிழ் இசை அமைப்பாளர் மீது கல்யாணி பாலியல் குற்றச்சாட்டு
இவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: எனக்கு 8 வயது இருக்கும். இப்போது பிரபலமாக இருக்கும் ஒரு இசை அமைப்பாளர் எங்கள் குடும்பத்திற்கு நல்ல நெருங்கிய நண்பர். அவர் நான் தூங்கும் போது என்னை தேவை இல்லாத இடங்களில் தொடுவார். அதை இப்ப நினைத்தால் கூட எனக்கு கஷ்டமாக இருக்கிறது. இதை நான் எங்கேயுமே சொன்னது இல்லை. முதல் முறையாக என் கணவரிடம் தான் இதை சொன்னேன்.
இப்போது அதை நினைத்தால் கூட எனக்கு அருவருப்பாக இருக்கிறது. இந்த மாதிரி பல பாலியல் தொல்லையால் மன ரீதியாக பாதிக்கப்பட்டேன். தற்கொலைக்கு கூட முயன்றேன் என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!