
மஞ்சளில் மயக்கும் ஜான்வி கபூர்
புடவைகளில் ஒரு சில நடிகைகள்தான் பேரழகிகளாக இருப்பார்கள். அவர்களில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியும் ஒருவர். அவரது மகள் ஜான்வி கபூர், தனது சமூக வலைத்தள பக்கங்களில் அடிக்கடி கிளாமர், பிகினி புகைப்படங்களைத்தான் அதிகம் பதிவிடுவார். ஆனால், திடீரென அவருக்கு புடவை மீது காதல் வந்துவிடும். நேற்று தன்னுடைய இன்ஸ்டா தளத்தில் பிரபல பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்கோத்ரா வடிவமைத்த மஞ்சள் நிறப் புடவையில் சில புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார் ஜான்வி. இளமைக்கால ஸ்ரீதேவியைப் பார்ப்பது போலவே இருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்புதான் நடிகர் ஷாரூக்கானின் மகள் சுஹானா கான், ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் வடிவமைத்த சிவப்பு நிற புடவை அணிந்த புகைப்படங்கள் பாலிவுட்டினரை ஆச்சரியப்படுத்தின.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!