
புகழ் பெற்ற பிரான்ஸ் கிரான்ட் ரெக்ஸ் தியேட்டரில் வலிமை
பிரான்ஸ் நாட்டில் மட்டும் சுமார் 57 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட உள்ளது. அதற்கான முன்பதிவுகள் ஏற்கெனவே ஆரம்பமாகியுள்ளன. அங்குள்ள நகரப் பேருந்துகளில் கூட படத்தின் விளம்பரம் இடம் பெற்றுள்ளது. அந்நாட்டில் உள்ள அஜித் ரசிகர்கள் கிரான்ட் ரெக்ஸ் தியேட்டரில் படம் திரையிடப்படுவது குறித்து மகிழ்ச்சியாக உள்ளார்களாம்.
கடந்த சில வருடங்களில்தான் அத்திரையரங்கில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டு வருகிறது. முதன் முதலில் ரஜினிகாந்த் நடித்த "கபாலி" படம் திரையிடப்பட்டது. அதற்குப் பிறகு விஜய், அஜித் நடித்து வெளியாகும் படங்களும் திரையிடப்பட ஆரம்பித்தன.
"வலிமை" பட திரையிடல் குறித்து கிரான்ட் ரெக்ஸ் தியேட்டர் நிர்வாகமும் வலைதளத்தில் "தல அஜித்" என்று குறிப்பிட்டுள்ளது. அன்றைய காட்சிக்கு ஒரு டிக்கெட்டின் விலை 20 யூரோ, இந்திய ரூபாய் மதிப்பில் 1690 ரூபாய்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!