
விக்னேஷ் சிவன் படத்தில் தோனி?
அதில் அவர், ‛என்னுடைய ரோல் மாடல், என்னுடைய ஹீரோ, என்னுடைய நம்பிக்கை நட்சத்திரம்.... இவருடன் நான் இருக்கும் இந்த புகைப்படத்துக்கு என்ன கேப்ஷன் போட்டாலும், அது அவரை நான் சந்தித்த அந்த நொடியில் எனக்கு ஏற்பட்ட உணர்வை முழுமையாக வெளிப்படுத்தாது.
வாழ்க்கை மிகவும் அழகானது என்பதை நான் உணர்ந்த தருணம் அது. இப்படியான ஒரு தருணத்தை உருவாக்கிக் கொடுத்தமைக்காக, இந்த காலத்துக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். நான் அவரை இன்று சந்திக்கையில், ஒரு நல்ல கதையுடன் சந்தித்தேன். விரைவில் அவருக்கு ஆக்ஷன் சொல்லி அவரை இயக்கும் நாள் வரும்!" என்று குறிப்பிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
இதன்மூலம், தோனி சினிமாவில் நடிக்க உள்ளார் என்பதுபோன்ற தகவல்கள் பரவி வருகின்றன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!