20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் பிரசன்னா- கனிகா ஜோடி
Advertisement
Advertisement
20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் பிரசன்னா- கனிகா ஜோடி
பிப் 19, 2022
அ நிறம் | அளவு
Advertisement
பிரசன்னா - கனிகா ஜோடி 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான படம் "5 ஸ்டார்". இந்த படத்தில் தான் பிரசன்னா, கனிகா நடிகர்களாக அறிமுகமானார்கள். அதன்பின் இருவரும் தனித்தனியாக பல படங்களில் நடித்தனர். தற்போது 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிரசன்னாவும் , கனிகாவும் இணைந்து அஹா ஓடிடி தளம் தயாரிக்கும் ஒரு புதிய இணைய தொடரில் நடிக்கிறார்கள். இயக்குனர் பாலாஜிமோகனின் உதவி இயக்குனர் விக்னேஷ் விஜயகுமார் என்பவர் இயக்குகிறார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!