
சினிமாவில் ஹீரோவாகும் வனிதா விஜயகுமார் மகன்?
வனிதாவிற்கு நடிகர் ஆகாஷ் என்பவருடன் முதல் திருமணம் நடந்தது. ஆகாஷூக்கும் வனிதாவுக்கும் விஜய் ஸ்ரீஹிரி என்ற மகனும் மற்றொரு பெண் குழந்தையும் பிறந்தனர். அவரது இரண்டாவது திருமணத்தில் மேலும் ஒரு மகள் என மூன்று குழந்தைகள் வனிதாவுக்கு உள்ளனர். இதில் விஜய் ஸ்ரீஹரி முதல் கணவர் ஆகாஷ் பரமாரிப்பில் வளர்ந்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் கூட தனது மகன் விஜய் பற்றி வனிதா ஒரு முறை உருக்கமாக பேசியிருந்தார். விஜய் ஸ்ரீஹரி சினிமா தொடர்பான படிப்பை முடித்துள்ளதுடன் ஒரு குறும்படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். அவர் விரைவில் வெள்ளித்திரையில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!