
வலிமையை பீட் செய்த பீஸ்ட்
பாடலுக்கு சிலர் கடுமையான விமர்சனங்களைக் கொடுத்தாலும் இளம் ரசிகர்களின் மத்தியில் இப்பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியான 5 நாட்களுக்குள்ளாகவே 50 மில்லியன் பார்வைகளைக் கடந்துவிட்டது.
அஜித் நடிப்பில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் அடுத்த வாரம் வெளியாக உள்ள "வலிமை" படத்தின் முதல் சிங்கிளான "நாங்க வேற மாறி" பாடல் யு டியூபில் கடந்த ஆறு மாதங்களில் 44 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்த சாதனையை தற்போது "அரபிக்குத்து" முறியடித்துள்ளது.
யு டியூபில் தென்னிந்திய அளவில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்த "ரவுடி பேபி" பாடல் 1300 மில்லியன்களைக் கடந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த மூன்று வருடங்களாக அந்த சாதனையை எந்த ஒரு தென்னிந்தியப் படங்களின் பாடலாலும் முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!