
அஜித்துடன் டூயட் இல்லாதது வருத்தம் : ஹூமா குரேஷி
தினமலருக்கு ஹூமா குரேஷி அளித்த பேட்டி : ‛‛வலிமை படத்தில் முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்துள்ளேன். எனக்கு பைக் மிகவும் பிடிக்கும், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பைக் சாகச காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவரும். வசனங்கள் பேச இயக்குனர் வினோத் உதவினார். அதேப்போன்று படப்பிடிப்பு தளத்திலும் அஜித் உதவினார். முதல்நாளே அவருடன் நடிக்க சுலபமாக இருந்தது. இந்த படத்தில் அஜித் உடன் டூயட் பாடாதது, வருத்தமாக உள்ளது. காலா படத்திற்கு பின் நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தேன். இயக்குனர்கள் வாய்ப்பு தந்தால் தமிழில் தொடர்ந்து நடிக்க நான் தயாராக உள்ளேன். தமிழ், ஹிந்தி படங்கள் இரண்டில் நடிப்பதற்கு வித்தியாசம் தெரியவில்லை. எந்த மொழியிலும் நடிப்பு மட்டுமே பேசும்"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!