பிரபுதேவாவின் முசாசி
பிப் 17, 2022
Advertisement
பிரபுதேவா நடிப்பில் தயாராகும் படத்திற்கு "முசாசி" என பெயரிடப்பட்டு, அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் இந்தபடம் ஆக்சன் எண்டர்டெய்னராக உருவாகிறது. சவாலான போலீஸ் அதிகாரி வேடமேற்றிருக்கும் பிரபுதேவாவிற்கு இந்த படத்தில் ஜோடியில்லை.
இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், நடிகர் "மாஸ்டர்" மகேந்திரன், "பழைய ஜோக்" தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார். ஜாய் பிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் ஜான் பிரிட்டோ தயாரிக்கிறார்.

Tags
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!