
ரஜினியுடனான பழைய புகைப்படத்தைப் பகிர்ந்த இளையராஜா
இளையராஜாவின் தயாரிப்பில் ரஜினிகாந்த் ஒரு புதிய படத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் கடந்த சில வாரங்களாகவே இருந்து வந்தது. இந்நிலையில் ரஜினிகாந்தின் 169வது படத்தை நெல்சன் இயக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியானது.
இதனிடையே, நேற்று ரஜினியுடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து "என்றும் என்றென்றும்" என இளையராஜா பதிவிட்டிருக்கிறார். இது எதற்காக என்று ரசிகர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள். இளையராஜா, ரஜினிகாந்த் கூட்டணி மீண்டும் அமையுமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!