
பத்து வருட காதல் : ரகசியம் உடைத்த காஜல்
இந்தநிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது கணவரின் மேல் தனது கால்களை போட்டபடி அன்யோன்யமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துகொண்டுள்ள காஜல் அகர்வால், "இந்த அழகனை அவரது பிழைகள் பொறுத்து 2012லிருந்து காதலித்து வருகிறேன்.. ஹேப்பி காதலர் தினம்” என கூறியுள்ளார்.
பொதுவாக நடிகைகளின் காதல் எதோ ஒரு விதத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவே மீடியாவில் கசிந்து விடும்.. நயன்தாரா, சமந்தா, அமலாபால் ஆகியோரின் காதல் விஷயம் எல்லாம் அப்படி உடனே வெளியானவை தான்.. ஆனால் முன்னணி நடிகையாக வலம் வந்தபோதும் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக, அதாவது தனது திருமண அறிவிப்பை வெளியிடும் வரை தனது காதல் குறித்த ரகசியத்தை காஜல் அகர்வால் கட்டிக்காத்து வந்துள்ளார் என்பது ஆச்சர்யமான விஷயம் தான்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!