
இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் மீரா ஜாஸ்மின்
தன்னுடைய இடம் மீண்டும் தனக்குத்தான் என்று சொல்லுமளவிற்கு சமூகவலைதளத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்களைப் பார்க்கும் போது தோன்றுகிறது. 20 பிளஸ் நடிகைகள் வெளியிடும் கிளாமரான புகைப்படங்களுக்கு "டப்" கொடுக்கும் விதத்தில் நாளை 40 வயதைக் கடக்கப் போகும் மீரா சற்று முன் அதிரடியான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்தப் புகைப்படங்களைப் பார்த்தால் மீரா ஜாஸ்மினுக்கு 40 வயது என யாரும் சொல்ல மாட்டார்கள். “உங்கள் சொந்த மேஜிக்கை உருவாக்குங்கள்” என்ற கேப்ஷனுடன் மீரா அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மீராவின் இந்தப் புகைப்படங்களைப் பார்த்தால் இன்றைய இளம் நடிகைகளுக்குக் கண்டிப்பாகப் பொறாமை ஏற்படும் என்பது மட்டும் நிச்சயம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!