
புற்றுநோய் பாதித்த சங்கீத ஆசிரியை; அறுவை சிகிச்சையின் போது இளையராஜா பாடலை பாடி நெகிழ்ச்சி
சீதாலட்சுமி உடனே, தனக்கு மிகவும் பிடித்தமான "கேளடி கண்மணி" படத்திலிருந்து "கற்பூர பொம்மை ஒன்று பாடலைப் பாடியுள்ளார். அவருக்கு அந்தப் பாடல் மிகவும் பிடித்தமான பாடலாம். தான் சுவாசிக்க சிரமப்பட்டபோதெல்லாம் அந்தப் பாடலைப் பாடி நுரையீரலுக்கு பயிற்சி கொடுப்பது வழக்கமாம். அந்தப் பாடலின் பல்லவியில் வரும் ஒரு வரியை நுரையீரலின் செயல்பாடு சீராக இருந்தால் மட்டுமே பாட இயலுமாம். அதனாலேயே எப்போதும் சீதாலட்சுமி தனது சுவாசப் பயிற்சிக்காக அந்தப் பாடலைப் பாடுவாராம்.
அறுவை சிகிச்சையின்போதும் மருத்துவர்கள் பாட ஊக்கப்படுத்தியவுடன் அவர் நினைவில் வந்தது "கற்பூர பொம்மை" என்ற பாடல்தான். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அறுவை சிகிச்சையை மேற்கொண்ட அப்பல்லோ மருத்துவமனை சீதாலட்சுமியைப் பற்றி இசைஞானி இளையராஜாவிடம் கூறி அவரை சந்திக்க நேரம் பெற்றனர். இதனையடுத்து அப்போலோ மருத்துவர்களுடன் சீதாலட்சுமி, இளையராஜாவை சந்தித்தார்.
அந்த நெகிழ்ச்சித் தருணம் பற்றி சீதாலட்சுமி கூறுகையில், ‛நான் இளையராஜாவின் தீவிர ரசிகை. பல மெல்லிசை மேடைக் கச்சேரிகளில் அவருடைய பாடல்களை நான் பாடியுள்ளேன். ஒருநாள் நான் அவரை நேரில் சந்திப்பேன் என்று நினைத்தது இல்லை. இப்போதுகூட என்னால் நம்பமுடியவில்லை. என்னை சந்திக்க அவர் நேரம் ஒதுக்கி அன்பை வெளிப்படுத்தியுள்ளார்" என்று கூறினார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!