
எதற்கும் துணிந்தவன் - தெலுங்கில் சொந்தக் குரலில் பேசும் சூர்யா
இப்படத்தைத் தமிழ் மற்றும் தெலுங்கில் மார்ச் 10ம் தேதி வெளியிட உள்ளார்கள். இப்படத்திற்கான தெலுங்கு டப்பிங் தற்போது நடந்து வருகிறது. சூர்யா, தெலுங்கில் சொந்தக் குரலில் டப்பிங் பேசுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
சூர்யாவிற்கு தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க மார்க்கெட் உள்ளது. அவருக்கென அங்கு ரசிகர்களும் உள்ளார்கள். இதுவரையில் அவருடைய தெலுங்கு டப்பிங்கிற்கு வேறு ஒருவர் தான் குரல் கொடுத்து வந்தார். இப்போது முதல் முறையாக சூர்யாவே சொந்தக் குரலில் பேசுகிறார்.
இப்போது முன்னணி நடிகர்களின் படங்கள் பான்--இந்தியா படங்களாகத்தான் வெளியாகி வருகின்றன. "எதற்கும் துணிந்தவன்" படமும் தமிழ் தவிர, தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பான்--இந்தியா படமாக வெளிவர உள்ளது





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!