
பிப்., 16 முதல் தியேட்டர்கள் 100 சதவீதம் இயங்க அனுமதி
தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. பிப்ரவரி 15ம் தேதி வரை மட்டுமே ஊரடங்கு தளர்வுகள் குறித்த அறிவிப்புகள் ஏற்கெனவே வெளியாகியிருந்தது. பிப்ரவரி 16ம் தேதி முதலான தளர்வுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்த ஆலோசனைகளை இன்று(பிப்., 12) காலை மேற்கொண்டார். இந்நிலையில் மார்ச் 2ம் தேதி வரை ஏற்கனவே இருக்கும் கட்டுப்பாடுகளுடன் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தியேட்டர்களுக்கு 100 சதவீத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மார்ச் 16 முதல் 100 சதவீதம் இருக்கைகளுடன் தியேட்டர்கள் இனி தமிழகத்தில் இயங்கும்.
அஜித் நடித்துள்ள "வலிமை" படம் பிப்ரவரி 24ம் தேதி வெளியாக உள்ளது. இதன்மூலம் இந்தப்படம் 100 சதவீத இருக்கைகளுடன் வெளியாக உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!