
விஜய் சேதுபதி பட டீசர்களில் சாதனை படைத்த கா.வா.ரெ.கா
நேற்று மாலையில் வெளியான டீசருக்கு இன்று காலைக்குள் 70 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளது. இது உண்மையான விவரம் என டீசரை வெளியிட்டுள்ள இசை வெளியீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த படங்களின் டீசர்களில் இதுவரையிலும் "96" படத்தின் டீசர்தான் 63 லட்சம் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது.அந்த சாதனையை "காத்து வாக்குல ரெண்டு காதல்" டீசர் முறியடித்துள்ளது.
சுவாரசியமான படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இந்த டீசரைப் பார்த்ததும் ஏற்பட்டுள்ளது. அற்புதமான ஒளிப்பதிவு, விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரின் அனுபவம் வாய்ந்த நடிப்பு, அனிருத்தின் இனிமையான பின்னணி இசை இந்தப் படத்தின் டீசருக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கக் காரணமாக அமைந்துள்ளது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் "நானும் ரௌடிதான்" படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு வெற்றியைப் பெறுவார் என டீசரே சொல்லிவிட்டது என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!