
15 நாளில் ஒடிடிக்கு வந்த கீர்த்தி சுரேஷின் குட்லக் சகி
நாகேஷ் கூக்குன்னூர் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ஆதி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகியவற்றில் டப் செய்யப்பட்டுள்ளது. பலமுறை தள்ளி வைக்கப்பட்ட படம் கடந்த ஜனவரி 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கில் சர்காரு வாரி பட்டா, போலோ சங்கர் படங்களிலும், தமிழில் சாணி காகிதம் படத்திலும், மலையாளத்தில் வாஷி படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்கள் அவருக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!